தமிழ்நாடு நாளை முன்னிட்டுத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதை, தூத்துக்குடியைச் சேர்ந்த திருக்குறள் தூதர் மோ.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் திருவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில், அமைச்சர் இராசுமோகன் கலந்துகொண்டு திருக்குறள் மோ.அன்பழகனுக்குத் தமிழ்ச்செம்மல் விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
விழாவில் எல்லைப் போராட்ட வீரர்களுக்குக் கூடுதல் உதவித்தொகை வழங்கப்பட்டதுடன், நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்கான உரிமைத் தொகையும் வழங்கப்பட்டது.திருக்குறள் முற்றோதல் செய்த 179 பள்ளி மாணவ-மாணவியர்களுக்குத் தலா ₹15,000 ரொக்கப் பரிசும் விருதுகளும் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ச்சுனா, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, பால்வளத்துறை அமைச்சர் விசயலெட்சுமி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் இராசாராமன் மற்றும் இயக்குநர் அவ்வை அருள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

