தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-4 தேர்வுக்குத் தயாராகும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 14-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ச்சியாகக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 6,574 காலிப்பணியிடங்களுக்கான TNPSC Group IV - 2026 அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வு வரும் 10.01.2027 அன்று நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத் தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.11.2026 ஆகும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 14.10.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் துவங்கவுள்ளன.

இப் பயிற்சி வகுப்புகள் துறைசார்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு, நவீன ஸ்மார்ட் போர்டு (Smart Board) வசதியுடன் நடத்தப்படவுள்ளன. மேலும், தேர்வர்களின் திறனை மேம்படுத்த வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் (Mock Tests) நடத்தப்படும். போட்டிகளுக்கான அனைத்துப் புத்தகங்களும் வேலைவாய்ப்பு அலுவலக நூலக

த்தில் பயன்பாட்டிற்கு உள்ளன. தவிர, வேலைவாய்ப்புத் துறையின் மெய்நிகர் கற்றல் வலைதளமான www.tamilnaducareerservices.tn.gov.in-ல் பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டின் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள், Thoothukudi Employment Office என்ற டெலிகிராம் (Telegram) சேனலில் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

மேலும், 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை தந்தோ தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இச்சிறப்பு வாய்ப்பினைப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திப் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.