நெல்லை - தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முதல் திமுக மாவட்ட செயலாளரும், பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவருமான மறைந்த கே.வி.கே. சாமியின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை – தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முதல் திமுக மாவட்ட செயலாளராகவும், பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவராகவும், தூத்துக்குடி நகரசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர் கே.வி.கே. சாமி. இவர் கடந்த 20.09.1956-ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை நினைவுகூரும் வகையில், 1986-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு, அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி 'கே.வி.கே. சாமி மணிமண்டபம் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம்' எனப் பெயர் சூட்டிப் புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.வி.கே. சாமியின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் வ.உ.சி. சந்தை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், கங்கா ராஜேஷ், சுரேஷ் மகாராஜன், லியோ ஜான்சன், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகராட்சி ஓய்வூதியர் சங்க மாநகர தலைவர் இரா. மாடசாமி, சேவியர், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், சுமன், மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.