தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிதியுதவியுடன் கேம்ஸ்வில்லி விளையாட்டு அகாடமி நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டி தூத்துக்குடி ரோச் பூங்காவில் இருந்து தொடங்கியது. வங்கியின் செயல் துணைத் தலைவர் அசோக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.10, 05, 03 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கற்பகா கெமிக்கல்ஸ் நிறுவன இயக்குநர் கணேசன், கேம்ஸ்வில்லி விளையாட்டு அகாடமியின் புரவலர் பெர்த்தினால் தார்டியஸ், நிறுவனர் ரைபின் தார்டியஸ், மருத்துவர்கள் குமரன், நவீன், அர்ச்சனா, ஸ்டீபன், பொன்வேல் ராம்குமார், நிக்சன், பெரியசாமி, நிக்சன் மிரால்லே, தேவா கனகராஜ், அசோக்பாபு, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்

