தூத்துக்குடி காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) சுயநிதி வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா "காம்வெர் ஏஸ் 2K26" சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 42 கல்லூரிகளைச் சேர்ந்த 1,218 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடக்க விழாவில் அருண் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி இசக்கிமுத்து ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். நிறைவு விழாவில் ஸ்பிக் நிறுவன உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Arun_Land_Esakki.jpg

இப்போட்டியில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.சகாயதாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று ரூ.7,000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.