தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் நேற்று கரை திரும்பின. மற்ற வகை மீன்களின் வரத்து சற்று குறைவாக இருந்தபோதிலும், வார இறுதி விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்கப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் துறைமுகத்தில் அலைமோதியது.

சந்தையில் சீலா மீன் கிலோ ரூ.1,200, நண்டு கிலோ ரூ.800, ஊளி, பாறை, விளை மீன்கள் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கேரை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. சந்தையில் கேரை மீன் கிலோ ரூ.300 வரை விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.