நான் எலும்பை உடைப்பேன் என்று பேசியதற்கு உடனடியாக என்னைச் சிறையில் அடைத்தீர்கள்; ஆனால், என் தலைவரின் தாடையையே உடைத்தார்கள் என்று சைகை காட்டுகிறார்களே, இதற்குப் புகார் அளிக்க யாரும் இல்லையா?" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், "முன்பு ஒருமுறை 'எலும்பை உடைப்பேன்' என்று நான் பேசியதற்காகக் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இன்று எனது தலைவரின் தாடையை உடைத்துவிட்டார்கள் என்பது போலச் சைகை காட்டிக் கொண்டு திரிகிறார்களே, இந்தச் செயலுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நாட்டில் யாருமே இல்லையா?
அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக எதிர்க்கட்சியினரையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் ஒடுக்கும் நோக்கில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது." என்று அவர் காட்டமாகப் பேசினார்.

