திருநெல்வேலி சரக காவல்துறை எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகளில் திறம்பட பணியாற்றிய காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தலைமைக் காவலர் கணபதி அம்மாள், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தலைமைக் காவலர் விஜயா, திருநெல்வேலி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்ட தலைமைக் காவலர் மாலதி ஆகிய மூவரும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

இதனை பாராட்டி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு, மூன்று பெண் தலைமைக் காவலர்களையும் சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

.