தூத்துக்குடி நிகிலேசன் நகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி செல்வ விநாயகருக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
பின்னர், ராஜகோபால் நகரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் தொடங்கி அப்பகுதியில் முக்கிய வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதில் 51 பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர்
தொடர்ந்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்கார தீபாரனை நடந்தது. இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

