தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவதானு (36) மனைவி வித்யா ஜோதி (35). இந்த தம்பதிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். வித்யா ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த 2 நாட்களாகக் குடும்பப் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனவேதனையில் இருந்த வித்யா ஜோதி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.