தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியில் உள்ள செங்கோட்டை, வெம்பூர், மெட்டில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நீர்வரத்து கால்வாய்கள், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கான மதகுகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றவும்,தூர்வாரப்பட வேண்டிய பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும், கண்மாய்களுக்கு நீர் செல்லும் பாதைகளை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதையும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கண்மாய்கள் மற்றும் மதகுகளின் நிலையை கண்காணித்து, சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரிசெய்யவும், மழைநீர் வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீர்நிலைகளில் நீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இரண்டாம் கட்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தாமதமின்றி மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும், விவசாயிகளின் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதனால் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து, மழைநீரை முறையாக சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,தனலட்சுமி ஒன்றிய பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன்,இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

