தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி, வடக்கு குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார் (29). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது தாய் ரேவதியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்றும் தனது தாயுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார், முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.