தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 15-ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில், பெயர் மாற்றம், புதிய இணைப்பு, சிலிண்டர் மானியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்துப் பொதுமக்கள் மனு அளித்துப் பயன்பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 15.10.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாகத் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.
இக்கூட்டத்தில் பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல்,
எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காணவும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

