தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் கையில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்து, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்துவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அப் வாலிபரை மடக்கிப் பிடித்துக் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முத்துமணி (19) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்த போலீசார், முத்துமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

