தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வருகிற 25.09.2026 அன்று 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மனுவில் இணைத்து தரவேண்டும்.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

