மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தலைமை கழக பிரதிநிதிகள் நல்ல சேதுபதி, தமிழ் கா. அமுதரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 22.08.2026 அன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கழக சீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தலைமை கழக பிரதிநிதி நல்ல சேதுபதி கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி மாநகர பகுதி செயலாளர்கள், விளாத்திகுளம் தொகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், கோவில்பட்டி தொகுதி நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.