தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து "தூத்துக்குடி மாவட்ட வரலாறும் பண்பாடும்" என்னும் தலைப்பில் பன்னாட்டு ஆய்வு மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழாவை வரும் நவம்பர் 28 அன்று நடத்துகின்றன.

வரலாற்றுத் தொன்மை, ஆன்மீகச் சிறப்பு, துறைமுக வளர்ச்சி மற்றும் இலக்கியப் பங்களிப்புகளால் தமிழ்நாடு வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டம் தனித்துவமான இடம் வகிக்கிறது. கொற்கைத் துறைமுகத்தின் கரிமக் கணிப்புச் சான்றுகள் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிற்கு முந்தையவை என்றும், ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருட்கள் கி.மு. 1600-க்கு முற்பட்டவை என்றும், சிவகளை அகழாய்வு நெல் மணிகள் கி.மு. 1155-க்கு முற்பட்டவை என்றும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், வ.உ.சிதம்பரனார் முதன்முதலாகக் கி.பி. 1907-ல் சுதேசிக் கப்பலான எஸ்.எஸ்.காலியாவை இங்கிருந்து இயக்கிய வரலாற்றுச் சிறப்பும் உண்டு. இச்சிறப்புகளைப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் பொருட்டு இந்த ஆய்வு மாநாடு நடைபெறுகிறது.

தலைப்பு: தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, தொல்லியல், பொருநை நாகரிகம், விடுதலைப் போராட்டம், நாட்டார் தெய்வங்கள், சூழலியல் மற்றும் வணிகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

வடிவம்: A4 அளவில் 8 பக்கங்களுக்கு மிகாமல் Arial Unicode எழுத்துருவில் (Font) இருக்க வேண்டும்.

கட்டணம்: மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

சமர்ப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 25, 2026.

மின்னஞ்சல் முகவரி: thoothukudihistory198620@gmail.com / crsethu1@gmail.com (Word மற்றும் PDF வடிவங்களில் அனுப்ப வேண்டும்).

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ISBN எண்ணிடப்பட்ட கடின அட்டை (Hardcover) நூலாக வெளியிடப்படும் என்பதோடு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் அ.வெளியப்பன் மற்றும் கல்லூரி மா.முருகானந்தம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.