தூத்துக்குடி துறைமுக சபை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனிதா தொடங்கி வைத்தார். முகாமின் முக்கிய நிகழ்வாகப் போதைப்பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சாந்தி நகர் மற்றும் அபிராமி நகர் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பேரணியை முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜய காண்டீபன் மற்றும் உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வுப் பேனர்களை ஏந்திச் சென்றனர்.

முகாமின் 7 நாட்களில் மாணவர்களுக்குப் பல்வேறு சமூக மற்றும் கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. முத்தையாபுரம் தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் நேரில் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் காசநோய் சார்ந்த விழிப்புணர்வை நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.

ஏழாம் நாள் நடைபெற்ற நிறைவு விழாவில் முகாம் தலைவர் ஷர்மிளா ஜெனிதா மற்றும் முதுகலை ஆசிரியர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த 7 நாள் சிறப்பு முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜலட்சுமி மற்றும் உதவி திட்ட அலுவலர் கண்ணன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.