தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்துச் சோதனை செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காகச் சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த கலைமணி (24), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (22) மற்றும் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த முத்துராஜ் (எ) கார்த்திக் (34) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.