தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலுடன் உபகோவிலும், முத்தாரம்மன் கோவில் வெளி பிரகாரத்தில் அமைந்ததுமான சித்தி புத்தி விநாயகர் திருக்கோவில்

திருநெல்வேலி - தூத்துக்குடி அருணா கார்டியோக் கேர் மருத்துவமனை சேர்மன் டாக்டர் அருணாசலம் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணலதா ஆகியோரால் கருங்கல் திருப்பணிகள் செய்யப்பட்டு அதன் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

விழாவில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், திருக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா உபயதாரருமான அருணாசலம், ஸ்வர்ணலதா தம்பதியர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.