தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜெயலட்சுமி (52). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஜெயலட்சுமி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். ஜெயலட்சுமியின் மகள் காதல் திருமணம் செய்து தனியாக உள்ளார்.

மகன் சக்தி கணேஷ் மட்டும் ஜெயலட்சுமி உடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். கடந்த இரண்டு மாதங்காலமாக மகன் சக்தி கணேஷ் ஜெயலட்சுமி உடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தாராம். இதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்த ஜெயலட்சுமி நேற்று காலை ஹேர் டை குடித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

மகன் மாலை வேலை முடித்து மாலை 5 மணி அளவில் வந்து பார்க்கும் பொழுது கழுத்து வீங்கி இருந்ததை பார்த்து விசாரித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார் மருத்துவமனையில் சேர்த்து சிறிது நேரத்தில் ஜெயலட்சுமி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

விளாத்திகுளம் அருகேயுள்ள வேலிடுபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி கருப்பாயம்மாள் (70). இவர், தீராத வயிற்று வலி காரணமாக லைசாலை குடித்துள்ளார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.