தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் உதவி காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய உட்கோட்டங்களுக்குப் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ரூரல் உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் ஏ நாயர், நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் உடனடியாகத் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

