உலக மீன்வளத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை சார்பாக உலக மீன்வளத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவக்;; கிராமத்தில் பாரம்பாரிய மீன்பிடிப்பில் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்;; புன்னக்காயல் மீனவ கிராமத்தை சார்ந்த 30 மீனவர்கள் கலந்து கொண்டனர். ச.மாரியப்பன், உதவிப் பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார். திட்டத்தின் முதன்மை ஆராயச்சியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் த. ரவிக்குமார், நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையின் முக்கியத்துவத்தை மீனவர்களிடையே எடுத்துரைத்தார்.
மேலும் மேம்படுத்தப்பட்ட நவீன ஓடுகயிறுத் தூண்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மீன்பிடித் திறனை அதிகரித்து, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்வள ஆய்வாளர் அக்னிகுமார் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசுகையில், "மேம்படுத்தப்பட்ட நவீன ஓடுகயிறுத் தூண்டில் முறையை தங்களது மீன்பிடி படகுகளில் பின்பற்றி,; பொருளாதார வருவாயை மேம்படுத்திக் கொள்ளுமாறு மீனவர்களை ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புன்னக்காயல் ஊர் நல சங்கப் பொருளாளர் ஜெலிஸ்டின் கலந்து கொணடு வாழ்த்துரை வழங்கினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கினார். தள உதவியாளர்கள் ஜான்ஸன் மற்றும் பி. மரிய அந்தோணி சுதாகர், நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையை இயக்கும் முறை குறித்து பங்கேற்ற மீனவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
உதவிப் பொறியாளர் அ. மைக்கேல் அந்தோணி பிரபாகர், மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர் ந.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

