தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த தீவிர ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, திருச்செந்தூருக்கு நேரில் சென்று கோவில் வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழாவிற்குக் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்கள் எந்தவித சிரமமின்றி எளிதாகச் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் உரிய வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மற்றும் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திருச்செந்தூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

