தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் தங்களது சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் இடங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சிரமமின்றித் திரும்புவதற்கு வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (தீபாவளி) மற்றும் திங்கள்கிழமை (நவம்பர் 9) எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.