திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று (28.10.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 6 - ஆவது மாநில நிதி குழு மானியம் (ம) பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடத்தினையும், ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.98.96 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடத்தினையும்,
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியபட்டணம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் பிலோமி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், 15வது நிதிக்குழு புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், AGAMT II திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் உணவு தானியக்கிடங்கு,
உடன்குடி ஊராட்சி ஒன்றியம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஆதியாகுறிச்சி ஊராட்சி கணியார்குடியிருப்பு பகுதியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், AGAMT II திட்டத்தின் கீழ் நங்கைமொழி ஊராட்சி, தர்மபுரி கிராமம், மெஞ்ஞானபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடமும்,
வீரபாண்டிய பட்டணம் ஊராட்சி, ஜூபிலி நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினையும்,
வீரபாண்டியபட்டணம் ஊராட்சி, ஜெ ஜெ நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் AGAMT II திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், நா.சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, உதவி இயக்குநர், பேரூராட்சிகள், திருநெல்வேலி மண்டலம் சுஷம்மா, உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரி, இளநிலை பொறியாளர் முத்துகுமாரசுவாமி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

