தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி கேரளம் வரலாறு படைத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கேரள மாநிலத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முதல்வர் சதீசன், "வாக்குரிமையை இழந்தோருக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்காகக் கேரளம் எப்போதும் உறுதியுடன் நிற்கும். ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடித்தளமான வாக்களிக்கும் உரிமையைச் சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் எங்களால் அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

