திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தேசிய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 104 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
கல்வித்தகுதி:அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரியில் (இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது) செவிலியர் பட்டயப் படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) பெற்றிருக்க வேண்டும்.தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருத்தல் கட்டாயம்.
விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்களை திருநெல்வேலி மாவட்ட வலைதளமான https://tirunelveli.nic.in -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ / தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி தெரு, சமாதானபுரம்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002.
மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

