தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நமச்சிவாயபுரத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி வஉசி கல்லூரி பேராசிரியர்கள் பிரேமலதா, சசிகலா,கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரூத்ரத்தினகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர் இராஜேஸ்வரி முகாமை துவக்கி வைத்தார்.காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சுகஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எழில் ஷோபனா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி ஊரக வளர்ச்சித் துறை முதன்மை பயிற்றுனர் அழகுநாச்சியார் போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.

வழக்கறிஞர் கனிராஜ் மாணவர்களுக்கான சட்டங்கள் பற்றி பேசினார்.தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை, லட்சுமி விஷன்,லயன்ஸ் கிளப் ஆப் புதூர் நாகலாபுரம் வின்னர்ஸ் சார்பாக பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

நிகழ்வில் லயன்ஸ் கிளப் ஆப் புதூர் நாகலாபுரம் வின்னர்ஸ் தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் சபரிகணேஷ், செயலாளர் பிராங்கிளின் ராஜாமணி,நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆல்டிரின்,ஜமீன்செங்கல்படை ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவர் இரவீந்திரன்,முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் விஷ்வக் மற்றும் உதவி திட்ட அலுவலர் தேவி இராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோன்று விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கமலாபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி,கோவில் வளாகம் தூய்மைப்பணி, சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், குளத்தில் முட்செடி அகற்றுதல்,யோகா பயிற்சி முகாம், மரக்கன்று நடுதல்,பள்ளி வளாகம் தூய்மை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றது.

NSScamp2.jpg

பள்ளித் தலைமையாசிரியை தேவிசுப்புலட்சுமி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் நித்யாசுமதி,உதவித் திட்ட அலுவலர் மல்லிகா,ஆசிரியை பிரதீபா,மஞ்சுளா,காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, கவின்போஸ் மருத்துவமனை மருத்துவர் மகாலட்சுமி,யோகா பயிற்றுநர் ஆறுமுகச்சாமி,ஊர்த்தலைவர் கந்தசாமி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.