ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குப் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நவ்ரீத் சிங்கைத் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போலி அடையாளத்தைப் பயன்படுத்தித் துருக்கி குடியுரிமையைப் பெற்றிருந்த நவ்ரீத் சிங்கின் உண்மையான அடையாளத்தை நமது இந்தியப் புலனாய்வு அமைப்புகள் ஒவ்வொரு தடையையும் தகர்த்து அதிரடியாக வெளிக்கொண்டு வந்தன.
தீவிர முயற்சியின் பலனாகத் தற்போது அவனை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட நவ்ரீத் சிங், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்."*
தொடர்ந்து பேசிய அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணமான அனைத்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், வரும் டிசம்பர் 2029-க்குள் நாட்டில் இயங்கி வரும் அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் வேரோடு ஒழித்துக்கட்ட பாஜக அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.

