சர்வதேச எம்மி விருது வழங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறும் நடிகர் விஜய் சேதுபதி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெறும் 54-வது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில், விருது வழங்கும் முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளார்.
சர்வதேச அளவில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகளுக்காக அமெரிக்காவில் சர்வதேச எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டிற்கான 54-வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் நவம்பர் 23-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த மதிப்புமிக்க விழாவில், சர்வதேச அளவில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை நடிகர் விஜய் சேதுபதி பெறுகிறார்.
எம்மி விருது மேடையில் ஒரு இந்திய நடிகர் விருதை வழங்கவிருப்பது நாட்டுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் கிடைத்த மாபெரும் கவுரவம் எனத் திரைத்துறையினர் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

