தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சிங்கராஜ் (20). இவர் தனது பைக்கில் புதூரில் இருந்து சிவலார்பட்டி நோக்கித் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். புதூர் காவல் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீதுமோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த சிங்கராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

