தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் கழுவன் (31). தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் உறவினர், கழுவனின் செயலைத் தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கழுவன், அந்த உறவினரையும் அவதூறாகப் பேசித் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நாலாட்டின்புதூர் காவல் துறையினர், இளம்பெண்ணை மிரட்டித் தாக்குதலில் ஈடுபட்ட கழுவனை அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

