சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குப் பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை, வில்வ இலை மற்றும் விரலி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுத் திவ்ய அலங்காரம் செய்யப்பட்டது. வழிபாட்டின் முக்கிய நிகழ்வாகப் பிரதோஷ ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் உமா மகேஸ்வரி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, சிவ முழக்கத்துடன் நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குப் பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த ஆவணி மாதப் பிரதோஷ வழிபாட்டில் விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.