தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் பசும்பொன் மக்கள் கட்சி நிறுவனர் இசக்கிராஜா (46). இவர் பிரபல வேலவன் ஹைபர் மார்க்கெட் அதிபரிடம் நகை சம்பந்தமான விவகாரத்தில் ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் போலீசார், இசக்கிராஜாவைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண். 3 நீதிமன்றத்தில் இசக்கிராஜா மனு தாக்கல் செய்தார்.
இம் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயகுமார், இசக்கிராஜாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, அவர் தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்குக் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இசக்கிராஜா நாளை வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

