தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லீம் மகளிருக்கு உதவிடும் வகையில், அவர்கள் சுயமாகத் தொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யவும், கைவினைப் பொருள்கள் மற்றும் சிறுதொழில் புரிவதற்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைத் பதவி வழித் தலைவராகக் கொண்டு "தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 2" தொடங்கப்பட உள்ளது.
இச்சங்கத்தில் ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச் செயலாளர்கள், மூன்று உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லீம்களில் சமூக பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, மிக்க ஆர்வமுடன் செயல்படும் தலைசிறந்த பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லீம் ஏழை மற்றும் வயதான முஸ்லீம் பெண்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்-2 ல் பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் தங்களது முழுவிவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 23.10.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

