சர்வதேச சந்தை நிலவரங்களின் எதிரொலியாகத் தொடர்ந்து சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஏறுமுகமாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை, நவம்பர் 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவரனுக்கு ரூ.480 உயர்ந்த தங்கம் விலை:
சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த மாதம் தங்கத்தில் முதலீடு செய்வதைப் பெருமளவில் குறைத்திருந்ததன் காரணமாக, கடந்த சில நாட்களாக நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும், கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.92,320-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து இன்றும் (நவம்பர் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.92,800-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்த வெள்ளி விலை:தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.165-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கும் விற்பனையான வெள்ளி, நேற்றும் அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 27) வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.170-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


