திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பிரம்மாண்ட கேக்கை வெட்டினார். தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்துப் பயணிகளுக்கு அவர் கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் கலைச்செல்வி, பொருளாளர் சுசி ரவீந்திரன், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, ஆனந்த் காபிரியேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

