கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டமாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.
பணியிட விவரங்கள் & தகுதிகள்:
1. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator):
காலிப்பணியிடம்: 1
மாதத் தொகுப்பூதியம்: ரூ. 28,000/-
கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம் அல்லது சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் முதுகலை பட்டம் (Master's) பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் (Bachelor's) பெற்றிருப்பதுடன், திட்டம் உருவாக்குதல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்பில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
முன்னுரிமை: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor):
காலிப்பணியிடம்: 1
மாதத் தொகுப்பூதியம்: ரூ. 23,000/-
கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம் அல்லது மனநலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆலோசனை மற்றும் தகவல் தொடர்பு பாடப்பிரிவில் முதுகலை பட்டயப் படிப்பு (Post Graduate Diploma) முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: அரசு நிறுவனம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் (NGO) குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். அவசர உதவித் தொலைபேசி சேவைகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுவான தகுதிகள்:
இரண்டு பணியிடங்களுக்கும் கணினி அறிவு (Computer Knowledge) கட்டாயமாகும்.
01.09.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்:
மாதிரி விண்ணப்பப் படிவத்தை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.kanniyakumari.nic.in வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்து, வரும் 05.10.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்:
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3-வது தளம், இணைப்பு கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகர்கோவில் - 629001.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

