தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்ச்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அங்குள்ள பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள குடிநீர் பைப் லைன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உடைந்ததாக கூறப்படுகிறது.
அதிலிருந்து தொடர்ந்து குடிநீர் வெளியே வந்து வீணாக செல்வதாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை அப்பகுதி வழியாக செல்லும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
குடிநீர் பஞ்சம் நிலவும் நிலையில், குடிநீர் வீணாக செல்வதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உடனடியாக பைப் லைனை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் போராட்டம் நடத்த போவதாகவும் வணிகர் சங்கம் எச்சரித்துள்ளது.

