கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இலக்கியச் சாரல் அமைப்பின் 14-ஆவது நிகழ்வாகப் புத்தகத் திறனாய்வு, சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்குதல் மற்றும் பிரம்மகுமாரிகள் அமைப்பின் ரக்ஷா பந்தன் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜான்கணேஷ் தலைமை வகித்தார். சுரேஷ்குமார், பிரபு, முருகேசன், பொன்ராஜ் பாண்டியன், எழுத்தாளர் பொன்னுராசு, செல்வம், சுப்புலட்சுமி மற்றும் ரெங்க லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை குருலட்சுமி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் கவிஞர் தத்துவம் கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன் எழுதிய 'மாண்புமிகு மனைவி' என்ற 17-ஆவது புத்தகத்தை முருகசரஸ்வதி, ராஜலட்சுமி, கிருஷ்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் திறனாய்வு செய்தனர்.

தொடர்ந்து, அமைப்பின் நிறுவனர் தினகரன் சாதனை ஆசிரியர்களான மணிமொழி நங்கை, கண்ணகி, ராஜலட்சுமி, சிவசங்கரி, ஸ்ருதி மற்றும் தங்கத்துரையரசி ஆகியோருக்கு 'ஆசிரியச் செம்மல்' விருது வழங்கிப் பாராட்டினார்.

பிரம்மகுமாரிகள் அமைப்பின் இந்திராணி தலைமையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டப்பட்டது. இந்நிகழ்வில் புதூர் அரசி, பெருமாள் அக்காள், கழுகுமலை மனோகர் உட்படப் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாகக் கவிஞர் போத்திராசு நன்றியுரையாற்றினார்.