கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு தூய சவேரியார் பேராலய வருடாந்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, வரும் டிசம்பர் 3-ஆம் தேதி (வியாழக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையில் "கோட்டாறு தூய சவேரியார் பேராலய வருடாந்திரத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 03.12.2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, 2026 டிசம்பர் திங்கள் இரண்டாம் சனிக்கிழமையான 12.12.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வுள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் (Under Negotiable Instruments Act 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 03.12.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு வழக்கம் போல் இயங்கும் என அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

