தூத்துக்குடி மாவட்டம், சன்னது புதுக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (23.09.2026, புதன்கிழமை) கயத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110/33-11KV சன்னது புதுக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை (23.09.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
கயத்தாறு வட்டாரம்: கயத்தாறு, ராஜாபுதுக்குடி, டி.என். குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என். புதூர்.
சுற்றியுள்ள கிராமங்கள்: நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, பிராஞ்சேரி, இத்திக்குளம், சன்னது புதுக்குடி.
பராமரிப்புப் பணிகளுக்குப் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கயத்தாறு விநியோகப் பிரிவு உதவிச் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

