அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்துள்ள பேட்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிரடியாகக் கைப்பற்றியது. இதனால் டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் செல்வாக்கு மற்றும் கொள்கை முடிவுகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "எனது கடுமையான குடியேற்றக் கொள்கை மற்றும் சட்டவிரோதமாகப் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமாக இருந்திருக்கலாம். அதுவே இந்தத் தேர்தலில் எங்களது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது" எனத் தனது தவறைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட பலரை பாதித்த இந்தக் கடுமையான போக்கை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்த டிரம்ப், இனிவரும் காலங்களில் நாட்டின் நலனைக் கருதி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.