தேரோட்ட முன்னிட்டு, சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து அய்யா வைகுண்டசாமி முத்துக்கொடையில் எழுந்தருளி, பல்லாக்கில் அமர்ந்து பஞ்சவர்ணத் தேரில் வீற்றிருந்தார். பாலபிரஜாபதி அடிகளார் குரு தலைமையில் இந்தத் திருத்தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க, காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் சுருள் வைத்து 'அய்யா சிவ சிவா, அரகரா அரகரா' என்ற பக்தி கோஷ முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். இத்தேரோட்டத் திருவிழாவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

