இச்சிறப்புச் சுற்றுலா ரயில் வரும் 13-ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இதில் பயணிக்க விரும்பும் பக்தர்களுக்கான பயணக் கட்டணங்கள் இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ரூ.25,880, மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.22,500, ஸ்லீப்பர் வகுப்பு ரூ.14,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலா ரயிலில் பயணிக்கும் பக்தர்கள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் தரிசிப்பதுடன், கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் ஆகிய ஆன்மிகத் தலங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இச்சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா ரயிலில் பயணிக்க விருப்பமுள்ள பக்தர்கள் www.tourtimes.in என்ற இணையதள முகவரியில் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.