இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, மற்றும் கடைவாடகை ஆகியவற்றின் நிலுவைத் தொகையினை 7 தினங்களுக்குள் முழுமையாக செலுத்தி முறையான ரசீது பெற்று கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட காலகெடுவிற்குள் நிலுவைத்தொகையினை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல், ஜப்தி முதலியன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே மாநகராட்சி கணணி வரிவசூல் மையங்கள் மூலமாகவும், இணையதள முகவரியான https://tnurbanepay.tn.gov.in _y« Quick Payment வழியாகவும் TN Urban Esevai android app வழியாகவும் எளிய முறையில் வரி செலுத்தலாம். எனவே பொதுமக்கள் தங்களது சொத்துவரி ,குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளையும் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.