தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வசந்த் அன் கோ கிளையை, அந்நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து, குத்துவிளக்கு ஏற்றிப் புதிய விற்பனையையும் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
இக்கிளையில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும், கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகைகளாக ரூ.25,000-க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்குத் தங்க நாணயம் இலவசம், ரூ.1,00,000-க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு எல்.பி.ஜி. கேஸ் ஸ்டவ் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முதல் நாளிலேயே ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கக் கடையில் திரண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் சூர்யா அயன்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மேடை சேர்மன், விஜயபாண்டி, முத்துகிருஷ்ணவேல், சுரேஷ், விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் வசந்த் அன் கோ ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

