தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டின் தொடக்கமாக, ஏ.ஐ.டி.யு.சி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் சங்கக் கொடியையேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த 8 கொடிக்கம்பங்களில் தொழிற்சங்கத் தோழர்கள் சங்கக் கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

ஏ.ஐ.டி.யு.சி மாநிலப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது குறித்து விரிவாகப் பேசினார். இந்நிகழ்வில் ஏ.ஐ.டி.யு.சி மாநிலப் பொதுச்செயலாளர் லோகநாதன் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

பொருளாளர் பாலசிங்கம், கட்டிடச் சங்க மாநிலச் செயலாளர் சேது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரும்பன், மாவட்ட உதவிச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு மற்றும் சி.பி.ஐ., ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், தோழர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளைத் தோழர்கள் பிச்சை, பெரியசாமி, பாக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.