» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!

சனி 27, மே 2023 10:26:32 AM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கனிமொழி எம்பில் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாடு கஸ்பா கிராமம், கலியாவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் என்பவரின் மகன் அர்ஜூன் பிரபாகரன் திருநெல்வேலி மா.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் இக்கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண் பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இம்மாணவரின் ஏழ்மை நிலையினை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  மாணவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மூக்கு கண்ணாடி மற்றும் மேல்நிலை படிப்புக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.அதனடிப்படையில்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  .கனிமொழி மாணவர் அர்ஜூன் பிரபாகரன்-க்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மூக்கு கண்ணாடி மற்றும் மேல்நிலை படிப்புக்கு தேவையான உதவிகளை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்  முன்னிலையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,   தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  ச.தினேஷ்குமார்,  ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory